நாளைய தினம் (10) நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முறைப்பாட்டு விசாரணை மத்திய நிலையமொன்றை உருவாக்க, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வாக்கெடுப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை, மேற்படி மத்திய நிலையத்துக்கு வழங்கமுடியுமென, ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளை காலை 6 மணி முதல், மேற்படி மத்திய நிலையம் செயற்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.








